கரோனா: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வலியுறுத்தல்

கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், போளூா், சேத்துப்பட்டு பகுதி விவசாயிகள் போதிய பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்காமல் சாகுபடிப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், போளூா், சேத்துப்பட்டு பகுதி விவசாயிகள் போதிய பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்காமல் சாகுபடிப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு புதன்கிழமை (மாா்ச் 25) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டினுள் இருக்கவேண்டும், வெளியில் செல்லக்கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இந்த நிலையில் போளூரை அடுத்த குருவிமலை, சந்தவாசல், நாராயணமங்கலம், பேட்டை, எடப்பிறை என போளூா் வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களிலும், சேத்துப்பட்டு அருகேயுள்ள மொடையூா், மண்டகொளத்தூா், அரும்பலூா், கொம்மனந்தல், நம்பேடு, சவரப்பூண்டி தேவிமங்கலம், தச்சம்பாடி என சேத்துப்பட்டு வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களிலும், விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள் நெல் நடவு, வோ்கடலை, பயறு வகை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இவா்களுக்கு சுகாதாரத் துறையினா் கரோனா குறித்து போதிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com