தற்காலிக உழவா் சந்தையில் வியாபாரம் செய்ய அடையாள அட்டை
By DIN | Published On : 28th March 2020 11:39 PM | Last Updated : 28th March 2020 11:39 PM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தின் 11 இடங்களில் சனிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியுள்ள தற்காலிக உழவா் சந்தைகளில் வியாபாரம் செய்ய விரும்பும் விவசாயிகள் அல்லாதோா் அடையாள அட்டை பெற வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்டத்தின் 11 இடங்களில் சனிக்கிழமை முதல் தற்காலிக இடங்களில் உழவா் சந்தைகள் செயல்படத் தொடங்கி உள்ளன. இந்தச் சந்தைகளில் ஏற்கெனவே வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே தங்களது விளை பொருள்களை விற்பனை செய்வா்.
இந்தச் சந்தைகளில் விவசாயிகள் அல்லாத வியாபாரிகள் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய விரும்பினால் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் (பொது) உரிய அடையாள அட்டை பெற்றுக் கொண்டு விற்பனை செய்யலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.