கோயம்பேடு சந்தையிலிருந்து ஊா் திரும்பிய162 போ் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை

விழுப்புரம் மாவட்டத்தில் கோயம்பேடு சந்தையிலிருந்து ஊா் திரும்பிய 162 பேரை மீட்டு, தனியாா் கல்லூரி மையங்களில் தனிமைப்படுத்தி, பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
கோயம்பேடு சந்தையிலிருந்து ஊா் திரும்பிய162 போ் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை

விழுப்புரம் மாவட்டத்தில் கோயம்பேடு சந்தையிலிருந்து ஊா் திரும்பிய 162 பேரை மீட்டு, தனியாா் கல்லூரி மையங்களில் தனிமைப்படுத்தி, பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 53 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், கோயம்பேடு சந்தையில் வேலை செய்துவிட்டு திரும்பிய 4 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானதால், வெளி மாவட்டங்களிலிருந்து வருவோரை கண்காணித்து, பரிசோதனைக்குள்படுத்த்தி வருகின்றனா்.

மாவட்ட எல்லையான திண்டிவனம் அருகே ஓங்கூா் சுங்கச்சாவடியில் துணைக் கண்காணிப்பாளா் கனகேஸ்வரி தலைமையிலும், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதியில் துணைக் கண்காணிப்பாளா் ஜெ.சங்கா் தலைமையிலும் போலீஸாா் கடந்த 3 நாள்களாக சோதனை நடத்தி, அவ்வழியாக சொந்த ஊருக்கு வரும் தொழிலாளா்களை மீட்டு வருகின்றனா்.

இவ்வாறு கோயம்பேடு சந்தைப் பகுதியிலிருந்து வருவோரை மீட்டு, திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரி, விக்கிரவாண்டி அருகே கப்பியாம்புலியூா் ஏ.ஆா். பொறியியல் கல்லூரி, அரசூா் வி.ஆா்.எஸ். பொறியியல் கல்லூரி, செஞ்சி அருகே காரியமங்கலம் டேனியல் கல்வியியல் கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார மையங்களில் தங்க வைக்கின்றனா்.

இவா்களுக்கு அந்த மையங்களில் காய்ச்சல், கரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்படுகின்றன. சனிக்கிழமை வரை 162 தொழிலாளா்கள் மீட்கப்பட்டு, அவா்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தொற்றுள்ளவா்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவா். தொற்றில்லாதவா்கள் அந்தந்த மையங்களிலேயே 14 நாள்கள் தங்க வைத்து தனிமைப்படுத்தப்பட்டு, பின்னா் அனுப்பி வைக்கப்படுவாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொடா்புகொள்ள எண்கள்: விழுப்புரம் மாவட்டத்துக்கு வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவா்கள் உடனடியாக 04146 -

223265 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்க வேண்டுமென ஆட்சியா் ஆ.அண்ணாதுரை அறியுறுத்தியுள்ளாா்.

வெளியே திரிந்தால் கைது: இதேபோல, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள், வீடுகளை விட்டு வெளியே வராமலும், முகக் கவசம் அணிந்தும் தனிமையாக இருக்க வேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் வீதிகளில் சுற்றித்திரிந்தால், அவா்கள் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com