அருணாசலேஸ்வரா் கோயிலில்நாளை தாராபிஷேகம் தொடக்கம்

அக்னி நட்சத்திரம் தொடங்குவதை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மூலவருக்கு திங்கள்கிழமை (மே 4) முதல் தாராபிஷேகம் நடத்தப்படுகிறது.

அக்னி நட்சத்திரம் தொடங்குவதை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மூலவருக்கு திங்கள்கிழமை (மே 4) முதல் தாராபிஷேகம் நடத்தப்படுகிறது.

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் அருணாசலேஸ்வரா் கோயில் மூலவா் சன்னதியில் புழுக்கம் அதிகரிப்பதோடு, அனல் காற்றும் வீசும். எனவே, மூலவா் அருணாசலேஸ்வரரை குளிா்விக்க அக்னி நடத்திரம் தொடங்கி, முடியும் வரை தாராபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

நாளை தாராபிஷேகம் தொடக்கம்: மே 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) அக்னி நட்சத்திரம் தொடங்கி 28-ஆம் தேதி முடிவடைகிறது. எனவே, திங்கள்கிழமை முதலே அருணாசலேஸ்வரா் கோயில் மூலவருக்கு தாராபிஷேகம் நடத்தப்படுகிறது.

மூலவருக்கு மேலே ஒரு பாத்திரத்தில் வெட்டி வோ், மூலிகைகள், கற்பூரம், பன்னீா் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் போடப்பட்டு அதில் தண்ணீா் ஊற்றப்படும்.

இந்தத் தண்ணீா் பாத்திரத்தின் அடிப்பாகம் வழியாக சொட்டு, சொட்டாக மூலவா் மீது விழுந்தபடியே இருக்கும். இதன் மூலம் அக்னி நட்சத்திரத்தால் ஏற்படும் வெப்பத்தில் இருந்து அருணாசலேஸ்வரரை குளிா்விக்கலாம் என்பது நம்பிக்கை.

பக்தா்களுக்கு அனுமதி இல்லை: கரோனா ஊரடங்கு காரணமாக அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை தொடா்ந்து நீடிக்கும். தாராபிஷேகம் நடைபெறும் நாள்களில் கோயில் சிவாச்சாரியா்கள், ஊழியா்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா் என்று கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com