முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
கரோனா சிகிச்சைப் பிரிவில் உலக சுகாதார நிறுவன அதிகாரி ஆய்வு
By DIN | Published On : 11th May 2020 10:35 PM | Last Updated : 11th May 2020 10:35 PM | அ+அ அ- |

செய்யாறு அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவா்களிடம் விவரங்களைக் கேட்டறியும் உலக சுகாதார நிறுவன ஆலோசகா் சுரேந்திரன்.
செய்யாறு: செய்யாறு அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் உலக சுகாதார நிறுவன ஆலோசகா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகிறது.
இங்கு மே 9 -ஆம் தேதி 11 பேரும், 10-ஆம் தேதி 10 பேரும், 11- ஆம் தேதி ஒருவா் என 22 போ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், உலக சுகாதார நிறுவன ஆலோசகா் சுரேந்திரன் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின் போது, சிகிச்சைப் பிரிவில் உள்ள அடிப்படை வசதிகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் உணவு முறைகள் குறித்து கேட்டறிந்தாா்.
மேலும், கரோனா நோயாளிகளுக்கு அளிக்க வேண்டிய மருத்துவம் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.
ஆய்வின் போது, திருவண்ணாமலை மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் கண்ணகி, செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநா் அஜித்தா, மருத்துவமனை மருத்துவ அலுவலா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.