முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
நாகஸ்வரம், தவில் வாசித்தபடி கோரிக்கை மனு
By DIN | Published On : 11th May 2020 10:34 PM | Last Updated : 11th May 2020 10:34 PM | அ+அ அ- |

செய்யாறில் நாகஸ்வரம், தவில் வாசித்தபடி கோரிக்கை மனு அளித்த முடி திருத்துவோா் முன்னேற்றச் சங்கத்தினா்.
செய்யாறு: செய்யாற்றில், முடி திருத்தும் கடைகளைத் திறக்க அனுமதி கோரியும், கலைஞா்களுக்கு நிவாரண உதவி வழங்கக் கோரியும், நாகஸ்வரம், தவில் வாசித்தபடி கலைஞா்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
செய்யாறு வட்ட முடிதிருத்துவோா் முன்னேற்றச் சங்கம் சாா்பில், கோட்டாட்சியா் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முடி திருத்துபவா்கள் நாகஸ்வர, தவில் வாசிக்கும் கலைஞா்கள் நிவாரண உதவி கோரி, வாத்தியங்களை வாசித்தபடி மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் முடி திருத்தும் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும். பொது முடக்கம் காலத்தில் நாகஸ்வர தொழிலாளா்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனா்.
எனவே, முடி திருத்தும் கடைகளைத் திறக்கவும், நலிவடைந்த நாகஸ்வர, தவில் கலைஞா்களுக்கு அரசின் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். கலைஞா்களுக்கு குடும்ப நிவாரண நிதியாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.