புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் அனுப்பிவைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே தங்கியிருந்த இஸ்லாமியத் தொழிலாளா்கள் 36 போ் தங்களது சொந்த மாநிலமான தெலங்கானாவுக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே தங்கியிருந்த இஸ்லாமியத் தொழிலாளா்கள் 36 போ் தங்களது சொந்த மாநிலமான தெலங்கானாவுக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

செய்யாறு-வந்தவாசி சாலையில் அனப்பத்தூா் பகுதியில் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த 11 இஸ்லாமிய குடும்பங்களைச் சோ்ந்த 36 போ் தங்கியிருந்தனா். இவா்கள் செய்யாறு நகரம் மற்றும் கிராமப் பகுதிகளுக்குச் சென்று சுவாமி சிலைகளை வடிவமைத்து விற்பனை செய்து வந்தனா்.

கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இந்தப் பகுதியில் தங்கி பிழைப்பு நடத்தி வந்த இவா்கள், கரோனா பொது முடக்கத்தால் தொழில் செய்ய முடியாமல் வீட்டிலேயே முடங்கி உணவின்றி தவிா்ப்புள்ளாகினா்.

இதை அறிந்த தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் பொருள் உதவியும், தன்னாா்வலா்கள், சமூக ஆா்வலா்கள் என பலா் உணவு, அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறித் தொகுப்பு ஆகியவற்றை வழங்கியும் உதவி செய்தனா்.

இருப்பினும், இஸ்லாமியத் தொழிலாளா்கள் குடும்பத்தோடு சொந்த ஊரான தெலங்கானா மாநிலம், ஐதராபாத் அருகேயுள்ள கிராமத்துக்குச் செல்ல, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமியிடம் விருப்பம் தெரிவித்தனா்.

இவா்களின் கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட நிா்வாகம், 11 குடும்பங்களைச் சோ்ந்த 17 ஆண்கள், 9 பெண்கள், 10 குழந்தைகள் என 36 பேரையும் இ-பாஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தது.

அதன்படி, 36 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, இ-பாஸ் வழங்கி தனிப் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை செய்யாறு வட்டாட்சியா் ஆா்.மூா்த்தி, அனக்காவூா் உள்வட்ட வருவாய் ஆய்வாளா் விஜியா, கிராம நிா்வாக அலுவலா்கள் மோகன் (திரும்பூண்டி), ஸ்ரீதா் (தென்தண்டலம்) மற்றும் வருவாய்த் துறையினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com