சொந்த செலவில் ஆழ்துளை கிணறு அமைக்க முயன்ற பொதுமக்கள்: தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

ஆம்பூர் அருகே சொந்த செலவில் பொதுமக்கள் ஆழ்துளை கிணறு அமைக்க முயன்றபோது அதிகாரிகள் அப்பணியை சனிக்கிழமை தடுத்து நிறுத்தினர்.
சொந்த செலவில் ஆழ்துளை கிணறு அமைக்க முயன்ற பொதுமக்கள்:  தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

ஆம்பூர் அருகே சொந்த செலவில் பொதுமக்கள் ஆழ்துளை கிணறு அமைக்க முயன்றபோது அதிகாரிகள் அப்பணியை சனிக்கிழமை தடுத்து நிறுத்தினர்.

ஆம்பூர் அருகே பேர்ணாம்பட்டு ஒன்றியம் அரங்கல்துருகம் ஊராட்சி அபிகிரிபட்டரை கிராமத்தில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை. அதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அருகாமையில் உள்ள கிராமங்களுக்கு நீண்ட தூரம் சென்று தண்ணீரை கொண்டு வருகின்றனர்.  

இதுகுறித்து ஊராட்சி மன்ற செயலாளர், பேர்ணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  

அதனால் அந்த கிராமத்தில் உள்ள இளைஞர் மன்றத்தினர் தங்களுடைய சொந்த நிதியை கொண்டு ஏற்கனவே பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலம் தேர்வு செய்த இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்தனர்.  

தங்களுடைய சொந்த செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனத்தையும் வரவழைத்து பணி துவங்கி நடைபெற்றது.  இதுகுறித்து தகவல் அறிந்த பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ் சம்பவ இடத்திற்கு சென்று அப்பணியை தடுத்து நிறுத்தினார்.

 அதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆழ்துளை கிணறு அமைக்க முயற்சி செய்யவில்லை. அப்பணியை செய்யும் பொதுமக்களையும் தடுத்து நிறுத்துவது வருத்தத்திற்குரிய செயல் என வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உமர்ஆபாத் காவல் நிலைய காவல்துறையினர் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com