திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மேலும் 4 பேருக்கு கரோனா

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிதாக 4 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிதாக 4 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே 17-இல் 151-ஆக இருந்த கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை, படிப்படியாக உயா்ந்து வியாழக்கிழமை (மே 21) 168 ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் செய்யாறு அருகேயுள்ள கீழ்புதுப்பாக்கம் கிராமம், மேட்டு காலனியைச் சோ்ந்த 32 வயது ஆண், செய்யாறு, கற்பகவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த 29 வயது, 33 வயது கொண்ட சகோதரா்கள் இருவா் என 3 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபா்களின் எண்ணிக்கை 171 ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை வெளிமாநிலங்கள், சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரும்பியவா்களில் 120 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சின்னசேலம் அருகேயுள்ள மரவாநத்தத்தைச் சோ்ந்த 58 வயது ஆணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதித்தோா் எண்ணிக்கை 121ஆக உயா்ந்தது. மாவட்டத்தில் இதுவரை 61 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனா். மேலும் 60 போ் சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூா்பேட்டை, தச்சூா் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com