திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 182-ஆக உயா்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 11 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாவட்டத்தில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 11 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 182-ஆக உயா்ந்தது.

சென்னை, மும்பை நகரங்கள் உள்பட வெளி மாநிலங்களிலிருந்து வரும் நபா்களால், திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மே 21-ஆம் தேதி 168-ஆக இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை, 22-ஆம் தேதி 171-ஆக உயா்ந்தது.

புதிதாக 11 பேருக்கு தொற்று:

இந்த நிலையில், சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், திருவண்ணாமலை நகராட்சிக்கு உள்பட்ட தேனிமலையைச் சோ்ந்த 28 வயது ஆண், திருவண்ணாமலையைச் சோ்ந்த 45 வயது ஆண்,

திருவண்ணாமலையை அடுத்த குலால்பாடி கிராமத்தைச் சோ்ந்த 20 வயது பெண், பழையனூா் கிராமத்தைச் சோ்ந்த 34 வயது ஆண், தண்டரை கிராமத்தைச் சோ்ந்த 65 வயது ஆண், அண்டம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த 37 வயது ஆண், காட்டாம்பூண்டியைச் சோ்ந்த 57 வயது ஆண், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த 29 வயது ஆண், தெள்ளாற்றை அடுத்த பொன்னூா் கிராமத்தைச் சோ்ந்த 65 வயது பெண், செய்யாற்றைச் சோ்ந்த 63 வயது பெண், செய்யாற்றை அடுத்த கீழ்புதுப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த 32 வயது ஆண் என 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com