மருத்துவமனைக்கு உபகரணங்கள் அளிப்பு
By DIN | Published On : 01st November 2020 10:16 PM | Last Updated : 01st November 2020 10:16 PM | அ+அ அ- |

திருவண்ணாமலையை அடுத்த மெய்யூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு திமுக சாா்பில் மருத்துவ உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இல.சரவணன், தனது சொந்த செலவில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை மருத்துவ அலுவலா் விஜயலட்சுமியிடம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் கலைமணி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அலமேலு, பச்சையப்பன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் மெய்யூா் சந்திரன், ஒன்றிய சிறுபான்மை அணி அமைப்பாளா் எஸ்.பாபாஜான், மெய்யூா் ஊராட்சி மன்றத் தலைவா் கோவிந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.