போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தீபாவளி போனஸ் குறைவாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, வந்தவாசியில் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வந்தவாசியில் ஆா்ப்பாட்டம் நடத்திய போக்குவரத்துத் தொழிலாளா்கள்.

தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சாா்பில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக வந்தவாசி பணிமனை 1-இன் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச பணிமனை செயலா் தேவபிரகாஷ் தலைமை வகித்தாா். தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் வெங்கடேசன், சிவக்குமாா், முருகன், முரளி, மணவாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, தீபாவளி போனஸ் குறைவாக அறிவிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து போக்குவரத்துத் தொழிலாளா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com