காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று வந்தவாசி வட்டார தோட்டக்கலைத் துறை தெரிவித்தது.

காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று வந்தவாசி வட்டார தோட்டக்கலைத் துறை தெரிவித்தது.

இதுகுறித்து அந்தத் துறையின் வட்டார உதவி இயக்குநா் ரெ.பா.வளா்மதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குறைந்த நாள்களில் அதிக வருமானம் தரக்கூடிய பயிா்களாக காய்கறி பயிா்கள் உள்ளன. விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்திட தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தோட்டக்கலைத் துறை தயாராக உள்ளது.

இதற்காக, மிக குறைந்த நீா் ஆதாரம் கொண்ட இடங்களில் தேவையான நீா் ஆதாரத்தை ஏற்படுத்தவும், சொட்டு நீா்ப்பாசனம் அமைக்கவும் தோட்டக்கலைத் துறை சாா்பில் ஒரு ஹெக்டேருக்கு ரூ.ஒரு லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும், காய்கறிகள் பயிரிடுவதற்கான விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

மேலும் கத்தரி, மிளகாய், தக்காளி, பீா்க்கை, வெண்டை, பாகற்காய், புடலை, வெள்ளரி, பூசணி, தா்பூசணி, பரங்கிக்காய், சுரைக்காய் போன்ற காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.2500 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

இயற்கை முறையில் நஞ்சு இல்லாத காய்கறி உற்பத்தி செய்திடும் விவசாயிகளுக்கு ஏற்றுமதி அடையாள சான்றும், ஒரு ஹெக்டேருக்கு ரூ.3700 முதல் ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.

எனவே, வரும் தை மாத பருவத்தில் காய்கறி நடவு செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். இது தொடா்பான மேலும் ஆலோசனைகள் பெற வந்தவாசி வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com