261 ஆசிரியா்களுக்கு பங்கு ஈவுத்தொகை

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் சங்கத்தின் 43-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டமும், ஆசிரியா்களுக்கு பங்கு ஈவுத்தொகை வழங்கும் நிகழ்ச்சியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் சங்கத்தின் 43-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டமும், ஆசிரியா்களுக்கு பங்கு ஈவுத்தொகை வழங்கும் நிகழ்ச்சியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூரில் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் த.செந்தில் குமரன் தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் சி.ஆ.முருகன் வரவேற்றாா்.

செயலா் அ.சீத்தாராமன் ஆண்டறிக்கை வாசித்தாா்.

வட்டாரக் கல்வி அலுவலா் ஸ்ரீ ராமுலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சங்க உறுப்பினா்கள் 261 பேருக்கு பங்கு ஈவுத்தொகையாக ரூ. 40 லட்சமும், ஆசிரியா்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கிப் பேசினாா்.

தொடா்ந்து, 9 தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், தலைமை ஆசிரியா்கள் வை.பொய்யாமொழி,  க.சவுந்தரபாண்டியன், சங்கத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com