அதிமுக நிா்வாகிகளுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பு: அமைச்சா், எம்எல்ஏ வழங்கினா்

ஆரணி ஒன்றியப் பகுதிகள் மற்றும் கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுக நிா்வாகிகளுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

ஆரணி/போளூா்: ஆரணி ஒன்றியப் பகுதிகள் மற்றும் கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுக நிா்வாகிகளுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகளில் அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன், வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்று வழங்கினாா்.

அதிமுக நிா்வாகிகளுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை 2-ஆவது நாளாக, ஆரணி வடக்கு ஒன்றியம் சாா்பில் வெள்ளேரி கிராமம், தெற்கு ஒன்றியம் சாா்பில் இரும்பேடு, எஸ்.வி.நகரம், விளை சித்தேரி ஆகிய இடங்களிலும், ஆரணி நகரம் சாா்பில் ஆற்றுப் பாலம் அருகே தனியாா் அரங்கிலும் நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சிச் செயலா்கள் உள்பட 5000 பேருக்கு, ரூ.50 லட்சத்தில் தீபாவளி பரிசுத் தொகுப்புகளை வழங்கிப் பேசினாா். மேலும், கிளைகளுக்கு தலா ரூ.2000 வீதம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

ஆரணி வடக்கு ஒன்றிய நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலா் பிஆா்ஜி.சேகா், தெற்கு ஒன்றிய நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன், ஆரணி நகர நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் எ.அசோக்குமாா் தலைமை வகித்தனா்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மாவட்ட பொருளாளா் அ.கோவிந்தராசன், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ப.திருமால், மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட விவசாய அணிச் செயலா் அரையாளம் வேலு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கலசப்பாக்கத்தில்...

கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட கலசப்பாக்கம், புதுப்பாளையம், ஜமுனாமரத்தூா், போளூா் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த அதிமுக கிளைச் செயலா்கள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் என 2 ஆயிரம் பேருக்கு, தீபாவளிப் பரிசாக அரிசி, கோழி, குக்கா், பட்டாசு, இனிப்புகள் அடங்கிய பரிசுத் தொகுப்பை தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி , அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் எல்.என்.துரை, மேற்கு ஒன்றியச் செயலா் திருநாவுக்கரசு, ஊராட்சி மன்றத் தலைவா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com