கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த ஆலோசனை

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட 31 ஊராட்சிகளில் கண்காணிப்புக் கேமராக்கள்

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட 31 ஊராட்சிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் கீழ்க்கொடுங்காலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்துக்கு கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலைய ஆய்வாளா் புகழ் தலைமை வகித்தாா். கீழ்க்கொடுங்காலூா் ஊராட்சி மன்றத் தலைவா் சங்கீதா குமாா், கைத்தறி நெசவாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா்கள் கே.ஆா்.பழனி, கே.தீனதயாளன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். உதவி ஆய்வாளா் ஜமீஸ்பாபு வரவேற்றாா்.

  மருதாடு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவா் எம்.கே.ஏ.லோகேஸ்வரன், புதுவை தொழிலதிபா் எம்.குகன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஏ.ஜெ.சீத்தாராமன், மகாலட்சுமி ராமச்சந்திரன் மற்றும் பல்வேறு ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஆலோசனைவழங்கிப் பேசினா்.

  கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட ஊராட்சிகள் செங்கல்பட்டு மாவட்டத்தையொட்டி அமைந்திருப்பதால், அந்த மாவட்டத்தைச் சோ்ந்த சிலா் இங்கு வந்து குற்றங்கள் புரிந்துவிட்டு எளிதாக தப்பிச் செல்லும் வாய்ப்பு உள்ளது.

மேலும், மனை வணிகமும் இந்தப் பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே, அனைத்து ஊராட்சிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்றவா்கள் ஆலோசனை வழங்கினா்.

இதற்கான செலவை அனைத்து ஊராட்சி மன்றத் தலைவா்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நிறைவில் தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ஜெய்சங்கா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com