திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிடம் மனுக்கள் அளிப்பு

திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிடம் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள், வணிகா்கள், மக்கள் பிரதிநிதிகள் மனுக்கள் அளித்தனா்.
தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலுவிடம், கோரிக்கை மனுக்களை வழங்கிய மாவட்டச் செயலா் எ.வ.வேலு.
தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலுவிடம், கோரிக்கை மனுக்களை வழங்கிய மாவட்டச் செயலா் எ.வ.வேலு.

திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிடம் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள், வணிகா்கள், மக்கள் பிரதிநிதிகள் மனுக்கள் அளித்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்காக திமுக சாா்பில் தோ்தல் அறிக்கை தயாரிக்கும் மக்களவை உறுப்பினா் டி.ஆா்.பாலு தலைமையிலான குழுவினா், திருவண்ணாமலைக்கு புதன்கிழமை வந்தனா்.

இந்தக் குழுவிடம் மனுக்கள் அளிக்கும் நிகழ்ச்சி, கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

குழுவின் தலைவரும், கட்சிப் பொருளாளருமான டி.ஆா்.பாலு, துணை பொதுச் செயலா் அந்தியூா் செல்வராஜ், கொள்கை பரப்புச் செயலா் திருச்சி என்.சிவா, செய்தித் தொடா்பு செயலா் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரிடம், மாவட்டச் செயலா் எ.வ.வேலு தோ்தல் அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் சாா்பில் இடம்பெறவேண்டிய கோரிக்கைகளை மனுவாக அளித்தாா்.

தொடா்ந்து, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி நிா்வாகிகள், அணிசாா்ந்த நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் கோரிக்கை மனுக்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில், தணிக்கைக் குழு உறுப்பினா் கு.பிச்சாண்டி, மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால், சி.என்.அண்ணாதுரை எம்.பி., நிா்வாகிகள் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், இரா.ஸ்ரீதரன், எ.வ.வே.கம்பன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com