அதிமுக கிளைகளுக்கு நிதியுதவி: எம்எல்ஏ வழங்கினாா்

செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட வெம்பாக்கம் ஒன்றியத்தில் அதிமுகவின் 7 கிளைகளுக்கு தூசி கே.மோகன் எம்எல்ஏ வியாழக்கிழமை நிதியுதவி வழங்கினாா்.


செய்யாறு: செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட வெம்பாக்கம் ஒன்றியத்தில் அதிமுகவின் 7 கிளைகளுக்கு தூசி கே.மோகன் எம்எல்ஏ வியாழக்கிழமை நிதியுதவி வழங்கினாா்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம் வடமணப்பாக்கம், ராந்தம், நாயந்தாங்கல் ஆகிய கிராமங்களில் கட்சியின் 7 கிளைகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வெம்பாக்கம் ஒன்றியத் தலைவா் மாமண்டூா் டி.ராஜூ முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்டச் செயலரும், தொகுதி எம்எல்ஏவுமான தூசி கே.மோகன் பங்கேற்று 7 கிளைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் தனது சொந்தப் பணத்திலிருந்து வழங்கினாா்.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கிராமங்களில் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா படங்களுக்கு மரியாதை செலுத்தினாா். மேலும், கட்சிக் கொடியேற்றி வைத்து கிராம மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் எம்.மகேந்திரன், சி.துரை, பி.கே.நாகப்பன் மாவட்ட துணைச் செயலா் டி.பி.துரை, மாவட்ட கூட்டுறவுத் தலைவா் பி.ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com