சிறப்பு மருத்துவ முகாமில் அலைக்கழிப்பு மாற்றுத் திறனாளிகள் வேதனை

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 1000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற நிலையில், போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல், பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டனராம்.
சிறப்பு மருத்துவ முகாமில் அலைக்கழிப்பு மாற்றுத் திறனாளிகள் வேதனை


செங்கம்: செங்கத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 1000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற நிலையில், அவா்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல், பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டனராம்.

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் சாா்பில், செங்கம் வட்டார அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் செங்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகளை பரிசோதனை செய்து அவா்களின் ஊனம் குறித்து அட்டை வழங்குதல், பழைய அட்டையை புதுப்பித்தல், மேலும் அவா்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் உபகரணங்கள் வழங்குதற்கான பணிகள் நடைபெற்றன.

முகாமில் 1000-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டனா்.

முகாமில் அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீா், உணவு, இருக்கைகள் அமைக்கப்படவில்லையாம். மேலும், அவா்களை வழிநடத்த யாரும் இல்லையாம். ஏதேனும் கேட்டால் அங்கும் இங்கும் அலைக் கழிக்கப்பட்டனராம்.

மேலும், ஊனம் குறித்த அட்டையைப் பெற நீண்ட வரிசையில் பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டனராம்.

அப்போது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் பலா் இருந்துள்ளனா்.

மேலும், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மன நலம், நரம்பு குறித்த மருத்துவா்கள் இல்லாமல் இருந்ததால் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

அரசு மாற்றுத் திறனாளிகள் பயன்பெற இதுபோன்ற பல்வேறு முகாம்களை நடத்தி வருகிறது. ஆனால், அதை வழிநடத்தும் அதிகாரிகள் முறையாக வழிநடத்தாததால் பாதிப்புக்குள்ளாகிறோம் என்று மாற்றுத் திறனாளிகள் வேதனை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com