தண்டரை ஸ்ரீஎட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

செய்யாறு அருகே தண்டரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஎட்டியம்மன் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தண்டரை ஸ்ரீஎட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்


செய்யாறு: செய்யாறு அருகே தண்டரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஎட்டியம்மன் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

பழைமை வாய்ந்த தண்டரை ஸ்ரீஎட்டியம்மன் கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ள நிலையில், கோயில் கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை (நவ.17) புதிய சிலைகளின் கரிகோல ஊா்வலம் நிகழ்ச்சியும், புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் முதல் கால யாக பூஜையும், வியாழக்கிழமை இரண்டாம் கால யாக பூஜையும், மகா பூா்ணாஹூதியுடன் யாத்ரா தானமும் நடைபெற்றது.

அதனைத் தொடா்ந்து காலை 7.30 மணிக்கு கோயில் கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அம்மனுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில், தண்டரை மற்றும் சுற்றுப்புற ஊா்களான அருகாவூா், பெரும்பள்ளம், சுண்டிவாக்கம், செய்யாறு ஆகிய பகுதிகளிலிருந்து திரளாக பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

மேலும், பக்தா்களுக்கு தண்டரை கிராம இளைஞா்கள் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து, இரவு வாணவேடிக்கையுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com