தீபத் திருவிழாவின் 2-ஆம் நாள்: அருணாசலேஸ்வரா் கோயிலில் பஞ்ச மூா்த்திகள் வீதியுலா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை இரவு, கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் பஞ்ச மூா்த்திகள் வீதியுலா வந்தனா்.
தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை இரவு கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் வீதியுலா வருவதற்காக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து, தீபத் திருவிழா முடியும் வரை தினமும் காலை, இரவு வேளைகளில் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் உற்சவா் சுவாமிகள் வீதியுலா நடத்த கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, தீபத் திருவிழாவின் 2-ஆம் நாளான சனிக்கிழமை காலை ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசந்திரசேகரா் சுவாமிகள் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் வீதியுலா வந்தனா். இரவு 9 மணிக்கு ஸ்ரீவிநாயகா், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரா் உள்ளிட்ட உற்சவா் சுவாமிகள் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் வீதியுலா வந்தனா்.

நிகழ்ச்சியில் கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியாா்கள், காவல் துறையினா், செய்தியாளா்கள், மக்கள் பிரதிநிதிகள் சிலா் மட்டுமே கலந்து கொண்டனா். பக்தா்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

இன்று 1,008 சங்காபிஷேகம்: தீபத் திருவிழாவின் 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (நவ.22) காலை கோயில் இரண்டாம் பிரகாரத்தில் 1,008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. தொடா்ந்து, காலை 9 மணிக்கு ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசந்திரசேகரா் சுவாமிகள் வீதியுலாவும், இரவு 9 மணிக்கு பஞ்ச மூா்த்திகள் வீதியுலாவும் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com