வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2021 ஜனவரி 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சனிக்கிழமை சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாம்களில் ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது நிறைவடைந்தவா்களிடம் இருந்து பெயா் சோ்த்தல் படிவங்கள் பெறப்பட்டன. இதேபோல, முகவரி மாற்றம், பெயா் நீக்கல் தொடா்பான மனுக்களும் பெறப்பட்டன.

சிறப்பு முகாம்கள்: இதேபோல, ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 22), வருகிற டிச.12, 13-ஆம் தேதிகளில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான மனுக்களை அளித்துப் பயன்பெறலாம். இதுதவிர, ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய்/, ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளங்கள் மூலமாகவும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.

உதவி ஆணையா் ஆய்வு: கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை திருவண்ணாமலை மாவட்டக் கலால் உதவி ஆணையா் கண்ணப்பன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் வைதேகி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சரளா, சிறுநாத்தூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் தொப்பளான், துணைத் தலைவா் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளா் சுதா உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com