தலித் விடுதலை இயக்க ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 23rd November 2020 08:48 AM | Last Updated : 23rd November 2020 08:48 AM | அ+அ அ- |

தலித் விடுதலை இயக்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள இயக்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, இயக்கத்தின் மாவட்டச் செயலா் என்.ஏ.கிச்சா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் அமுல்சாமி முன்னிலை வகித்தாா். மாவட்ட மகளிரணிச் செயலா் தலித் நதியா வரவேற்றாா். இயக்கத்தின் பொதுச் செயலா் ச.கருப்பையா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினாா்.
கூட்டத்தில், வருகிற டிசம்பா் 11-ஆம் தேதி திருவண்ணாமைலயில் இயக்கத்தின் முன்னாள் பொதுச் செயலா் தலித் ஞானசேகரனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது. இந்தக் கூட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனை அழைப்பது.
திருவண்ணாமலையில் அருந்ததியா் இன மக்களின் மயானப் பிரச்னை குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.