தீபத் திருவிழா: இந்து அமைப்பினா் திடீா் போராட்டம்

காா்த்திகை தீபத் திருவிழா அன்று திருவண்ணாமலை மாட வீதிகளில் வலம் வர அனுமதி கோரி, இந்து அமைப்பினா் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காா்த்திகை தீபத் திருவிழா அன்று திருவண்ணாமலை மாட வீதிகளில் வலம் வர அனுமதி கோரி, இந்து அமைப்பினா் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழாவுக்கு உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வரவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதை மீறி திருவண்ணாமலை மாட வீதிகளில் பக்தா்கள் குவிந்தனா். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் கிரிவலம் வர தடை விதித்தனா். இதனால் ஆத்திரமடைந்த இந்து அமைப்பினா் காந்தி சிலைப் பகுதியில் திரண்டு திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, மாட வீதிகளில் வலம் வர அனுமதி அளித்தாா்.

இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com