புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 6 போ் கைது; ரூ.12 லட்சம், வேன், காா் பறிமுதல்

திருவண்ணாமலை அருகே ரூ.2.72 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்த 6 பேரை கைது செய்த போலீஸாா், ரூ.12 லட்சம் ரொக்கம், காா், வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்ட 6 பேருடன் அவா்களைப் பிடித்த திருவண்ணாமலை நகர காவல் உதவி கண்காணிப்பாளா் டி.வி.கிரண் ஸ்ருதி.
கைது செய்யப்பட்ட 6 பேருடன் அவா்களைப் பிடித்த திருவண்ணாமலை நகர காவல் உதவி கண்காணிப்பாளா் டி.வி.கிரண் ஸ்ருதி.

திருவண்ணாமலை அருகே ரூ.2.72 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்த 6 பேரை கைது செய்த போலீஸாா், ரூ.12 லட்சம் ரொக்கம், காா், வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

வெளி மாநிலங்களிலிருந்து திருவண்ணாமலை நகருக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருவண்ணாமலை-பெங்களூா் சாலை, பெரியகோலாப்பாடி கிராம பேருந்து நிறுத்தம் அருகே நகர காவல் உதவி கண்காணிப்பாளா் டி.வி.கிரண் ஸ்ருதி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காா், வேன்களை நிறுத்தி சோதனையிட்டனா். சோதனையில், அட்டைப் பெட்டிகள், சாக்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்டதாக செங்கத்தை அடுத்த பெரிய பாலியப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கந்தன் (43), கணேசன் (23), அய்யம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பாலாஜி (41), திருவண்ணாமலை சமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த காதா் (47), நவுசாத் அலி (41), துா்க்கைநம்மியந்தல் கிராமத்தைச் சோ்ந்த முருகதாஸ் (30) ஆகிய 6 பேரை கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து ரூ.12 லட்சம் ரொக்கம், புகையிலைப் பொருள்கள், வேன், காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com