முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
சத்துணவுப் பணியாளா் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு
By DIN | Published On : 04th October 2020 11:19 PM | Last Updated : 04th October 2020 11:19 PM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள 509 சத்துணவு அமைப்பாளா், சமையலா், சமையல் உதவியாளா் பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்ப, 1.9.2020-ஆம் தேதி வயது மற்றும் கல்வித் தகுதித் தகுதியை அடிப்படையாகக் கொண்ட பெண் விண்ணப்பதாரா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பாளா் பணியிடம்:
பொதுப் பிரிவினா் மற்றும் தாழ்த்தப்பட்டோா் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவும், 21 வயது நிறைவடைந்தவராகவும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்கள் எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவோ, தோல்வி அடைந்தவராகவோ இருக்கலாம். 18 வயது நிறைவடைந்தவராகவும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோா் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவும், 20 வயது
நிறைவடைந்தவராகவும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
சமையலா் பணியிடம்:
சமையலா் பணியிடத்துக்கு பொதுப் பிரிவினா் மற்றும் தாழ்த்தப்பட்டவராக இருப்பின் எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவோ, தோல்வி அடைந்தவராகவோ இருக்கலாம்.
21 வயது நிறைவடைந்தவராகவும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
பழங்குடியினராக இருப்பின் எழுதப், படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. 18 வயது நிறைவடைந்தவராகவும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவராக இருப்பின் 20 வயது நிறைவடைந்தவராகவும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
சமையல் உதவியாளா் பணியிடம்:
பொதுப் பிரிவினா், தாழ்த்தப்பட்டவராக இருப்பின் ஐந்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவோ, தோல்வி அடைந்தவராகவோ இருக்கலாம். 21 வயது நிறைவடைந்தவராகவும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
பழங்குடியினராக இருப்பின் எழுதப், படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. 18 வயது
நிறைவடைந்தவராகவும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவா்கள் ஐந்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவோ, தோல்வி அடைந்தவராகவோ இருக்கலாம். 20 வயது நிறைவடைந்தவராகவும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை 8.10.2020 மாலை 5 மணிக்குள் நேரிலோ, பதிவஞ்சல் மூலமோ சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், நகராட்சி அலுவலகங்களிலும் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளாா்.