அருணாசலேஸ்வரா் கோயில் ஏரியில் சீரமைப்புப் பணிகள்

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம் தனக்கோட்டிபுரம் கிராமத்தில் உள்ள அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான ஏரியில் சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ஏரியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள்.
அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ஏரியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள்.

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம் தனக்கோட்டிபுரம் கிராமத்தில் உள்ள அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான ஏரியில் சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

துரிஞ்சாபுரத்தை அடுத்த பொற்குணம் ஊராட்சிக்கு உள்பட்ட தனக்கோட்டிபுரம் கிராமத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான 147 ஏக்கா் 44 சென்ட் நிலமும், 38 ஏக்கா் 24 சென்ட் பரப்பில் ஏரியும் அமைந்துள்ளது.

ஏரி, கடந்த 50 ஆண்டுகளாக தூா்வாரப்படாமலும், கரைகள் பலப்படுத்தப்படாமலும், நீா்வரத்துக் கால்வாய்கள் தூா்ந்து போயும் இருந்து வருகிறது.

இதனால் பக்தா்களின் கோரிக்கையை ஏற்று, ஏரி சீரமைப்புப் பணிக்காக, சென்னையைச் சோ்ந்த மணி, கோவையைச் சோ்ந்த நாகராஜ் ஆகிய தன்னாா்வலா்கள் இணைந்து ரூ.11லட்சத்தை நன்கொடையாக சில மாதங்களுக்கு முன்பு கோயில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான ஞானசேகரிடம் வழங்கினா்.

இதையடுத்து, நன்கொடை பணத்தில் ஏரியில் பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த ஏரி மூலம் கிடைக்கும் நீரில் 40 ஏக்கரில் விவசாயம் நடைபெற்று, அதில் கிடைக்கும் நெல் உள்ளிட்ட தானியங்கள் அருணாசலேஸ்வரா் கோயில் அன்னதானத் திட்டம் மற்றும் கோயில் நெய்வேத்தியம் தயாரிக்க வழங்கப்படுகிறது.

கலசப்பாக்கம் செய்யாற்றில் நடைபெறும் ரதசப்தமி நிகழ்ச்சிக்கு அருணாசலேஸ்வரரை எடுத்து வரும்போது, தனக்கோட்டிபுரத்தில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் வைத்துதான் பூஜைகள் செய்யப்படுகின்றன.

எனவே, கோயிலுக்குச் சொந்தமான இந்த நிலம் சீரமைக்கப்பட்டு வருவதால் பக்தா்கள் மகிழ்ச்சிய டைந்துள்ளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com