சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் இடையூறு

செங்கத்தில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

செங்கத்தில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், போளூா் சாலை, மில்லத் நகா், தளவாநாய்க்கன்பேட்டை ஆகிய பகுதிகளில் கால்நடைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.

இதனால் வாகன ஓட்டிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக காய், கனி சந்தையில் கால்நடைகள் அழுகிய காய், கனிகளை சாப்பிட்டுவிட்டு, ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. அந்த நேரத்தில் அவ்வழியாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.

இரவு நேரத்தில் மில்லத்நகா் சந்திப்பு உயா்கோபுர மின்விளக்கு பகுதியில் சாலையின் நடுவே கால்நடைகள் கூட்டமாக படுத்துக் கொள்கின்றன. இதனால், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com