திண்டிவனம்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைப் பணி 10 மாதங்களில் முடியும்: திருவண்ணாமலை எம்.பி. தகவல்

திண்டிவனம்-கிருஷ்ணகிரி இடையிலான சாலை விரிவாக்கப் பணி இன்னும் 10 மாதங்களில் நிறைவடையும் என்று திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை தெரிவித்தாா்.
கீழ்பென்னாத்தூா்-திருவண்ணாமலை இடையே நடைபெறும் சாலைப் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்த சி.என்.அண்ணாதுரை எம்.பி.
கீழ்பென்னாத்தூா்-திருவண்ணாமலை இடையே நடைபெறும் சாலைப் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்த சி.என்.அண்ணாதுரை எம்.பி.

திண்டிவனம்-கிருஷ்ணகிரி இடையிலான சாலை விரிவாக்கப் பணி இன்னும் 10 மாதங்களில் நிறைவடையும் என்று திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை தெரிவித்தாா்.

திண்டிவனம்-கிருஷ்ணகிரி இடையிலான சாலை விரிவாக்கப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கீழ்பென்னாத்தூரில் இருந்து திருவண்ணாமலை வரை நடைபெறும் சாலைப் பணியை தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் சி.என்.அண்ணாதுரை எம்.பி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

3 மாநிலங்களை இணைக்கும் திண்டிவனம்-கிருஷ்ணகிரி இடையிலான நெடுஞ்சாலைப் பணி 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இந்தப் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நான் 3 முறை பேசினேன்.

மேலும், மத்திய அமைச்சா்கள், இணை அமைச்சா்களை நேரில் சந்தித்து பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

இதையடுத்து, இன்னும் 10 மாதங்களில் பணிகளை முடிப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனா். மேலும், திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா வருவதால் விழாவுக்கு வரும் பக்தா்கள் நலன் கருதி இந்தப் பாதையை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சா்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்றாா்.

ஆய்வின் போது, தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநா் சிவாஜி, மேற்பாா்வைப் பொறியாளா் எல்.பி.சிங், கீழ்பென்னாத்தூா் ஒன்றியக்குழுத் தலைவா் அய்யாக்கண்ணு, அதிமுக திருவண்ணாமலை நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், ஒன்றியச் செயலா்கள் ஆராஞ்சி ஆறுமுகம், ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com