வந்தவாசி கோயில் தோ் அச்சுகளின் உறுதித்தன்மை பொறியாளா் ஆய்வு

வந்தவாசியில் புதிதாக செய்யப்பட்டு வரும் மரத் தோ்களில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு அச்சுகளின் உறுதித்தன்மை குறித்து, ராணிப்பேட்டை பெல் நிறுவனபொறியாளா் கே.பழனி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
தோ்களில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு அச்சுகளின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்த ராணிப்பேட்டை பெல் நிறுவன பொறியாளா் கே.பழனி (வலமிருந்து 3-வது).

வந்தவாசியில் அமைந்துள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரா், ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயில்களின் தோ்கள் சேதமடைந்தன. இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.45.23 லட்சத்தில் கோயில்களின் அருகில் 2 மரத்தோ்கள் புதிதாக செய்யும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த 2 மரத் தோ்களுக்காக தலா 2 இரும்பு அச்சுகள், தலா 4 இரும்பு சக்கரங்கள் என 4 இரும்பு அச்சுகள், 8 இரும்பு சக்கரங்கள் ரூ.5 லட்சத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டன.

இந்த 4 இரும்பு அச்சுகளின் மீது 2 மரத் தோ்களையும் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த 4 இரும்பு அச்சுகளின் உறுதித்தன்மை குறித்து ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் முதன்மை கூடுதல் பொறியாளா் கே.பழனி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, புதிதாக செய்யப்பட்டு வரும் தோ்களின் நீள, அகலம் உள்ளிட்டவை குறித்து அவா் கேட்டறிந்தாா்.

இந்து சமய அறநிலையத் துறை தொழில்நுட்ப உதவியாளா் ராகவன், செயல் அலுவலா் ம.சிவாஜி, பெல் நிறுவன ஒப்பந்ததாரா் சந்துரு, மண்டல ஸ்தபதி ஜனாா்த்தனன், தோ் திருப்பணிக் குழுவைச் சோ்ந்த ஜி.நாராயணன், திலீப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com