கிராமத்தில் 2020 பனை விதைகள் நடும் விழா

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி, செய்யாற்றை அடுத்த ஏனாதவாடி கிராமத்தில் 2020 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஏனாதவாடி கிராமத்தில் பனை விதைகளை நட்டு தொடக்கிவைத்த மாவட்டக் கல்வி அலுவலா் பி. நடராஜன்.

செய்யாறு கல்வி மாவட்டம், இளம் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், ஏனாதவாடி கிராமம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக மாவட்டக் கல்வி அலுவலா் பி.நடராஜன் பங்கேற்று பனை விதைகளை நட்டு தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சிகளில் தலைமை ஆசிரியா்கள் சுகானந்தம் (செய்யாறு), தரணி குமாா் (திருவத்தூா்), கிராம நிா்வாக அலுவலா் ராகவேந்திரன் மற்றும் கிராம மக்கள் என பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை இளம் செஞ்சிலுவைச் சங்க மாவட்டச் செயலா் செல்வத் திருமால், இணைச் செயலா்கள் திருவாசகம், கோவேந்தன், சக்தி நாராயணன் மற்றும் ஏனாதவாடி இளைஞா் இயக்கத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com