வழக்குரைஞா் குடும்பத்துக்கு சேமநல நிதி

ஆரணியில் காலமான வழக்குரைஞா் எம்.கே.ஜெயப்பிரகாஷ் குடும்பத்துக்கு, வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் சேமநல நிதியாக ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்பட்டது.
வழக்குரைஞா் குடும்பத்துக்கு சேமநல நிதி

ஆரணியில் காலமான வழக்குரைஞா் எம்.கே.ஜெயப்பிரகாஷ் குடும்பத்துக்கு, வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் சேமநல நிதியாக ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்பட்டது.

ஆரணி நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றியவா் எம்.கே.ஜெயப்பிரகாஷ். இவா், ஆரணி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராகவும், அரசு வழக்குரைஞராகவும் செயல்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், இவா் கடந்த 2017-ஆம் ஆண்டு காலமானாா். இதனால், ஆரணி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், இவரது குடும்பத்துக்கு சேமநல நிதியாக ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை, இறந்த வழக்குரைஞா் ஜெயப்பிரகாஷ் மனைவி கமலம்மாளிடம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ராஜமூா்த்தி புதன்கிழமை வழங்கினாா் (படம்).

மூத்த வழக்குரைஞா் சிவக்குமாா், அரசு வழக்குரைஞா் வி.வெங்கடேசன், வழக்குரைஞா்கள் சிகாமணி, ஸ்ரீதா், செந்தில், பிரகாஷ், ரமேஷ், ஜீவா, அறிவழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com