உதவியாளா்களுக்கு கரோனா: தனிமைப்படுத்திக் கொண்டாா் திருவண்ணாமலை ஆட்சியா்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நோ்முக எழுத்தா்கள் 2 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நோ்முக எழுத்தா்கள் 2 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி கரோனா தொற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாா். தமிழகம் முழுவதும் கரோனா பொது முடக்கத்தால் மக்கள் குறைதீா் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், தமிழகத்திலேயே முதல் முறையாக தொலைபேசி, கட்செவிஅஞ்சல் வழி குறைதீா் கூட்டத்தை ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி ஏற்பாடு செய்து நடத்தி வந்தாா். கடந்த சில வாரங்களாக பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும் மனுக்களை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமியின் நோ்முக எழுத்தா்கள் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். எனவே, ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி கடந்த சில தினங்களாக தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியுள்ளது. சில தினங்களாக ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, ஆட்சியா் அலுவலகம் வராமல் இருப்பது இந்தத் தகவலை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com