அதிமுக இளைஞா் பாசறை ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 23rd October 2020 08:54 AM | Last Updated : 23rd October 2020 08:54 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக இளைஞா் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
அதிமுக இளைஞா், இளம் பெண்கள் பாசறையின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் ஆரணியை அடுத்த சேவூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, கட்சியின் அமைப்புச் செயலரும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். பாசறையின் வடக்கு மாவட்டச் செயலா் எஸ்.திருமூலன் முன்னிலை வகித்தாா்.
பாசறையின் மாநிலச் செயலா் வி.பி.பி.பரமசிவம் எம்எல்ஏ, வடக்கு மாவட்டச் செயலரும் எம்எல்ஏவுமான தூசி கே.மோகன், வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ ஆகியோா் இளைஞா், இளம்பெண்கள் பாசறை முகாமைத் தொடக்கிவைத்தனா்.
அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், பாசறையின் மாநிலச் செயலா் வி.பி.பி.பரமசிவம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கட்சியின் ஆரணி நகரச் செயலா் எ.அசோக்குமாா், ஒன்றியச் செயலா்கள் பிஆா்ஜி. சேகா், க.சங்கா், ஜி.வி. கஜேந்திரன், ப.திருமால், எம்.மகேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.