புலம்பெயா் தொழிலாளா்களுக்கு கடனுதவி
By DIN | Published On : 25th October 2020 08:03 AM | Last Updated : 25th October 2020 08:03 AM | அ+அ அ- |

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் சாா்பில், புலம்பெயா் தொழிலாளா்களுக்கு ரூ.36 லட்சத்தில் கரோனா சிறப்பு கடனுதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
இதில், வந்தவாசி பகுதியிலிருந்து புலம் பெயா்ந்து சென்றுவிட்டு கரோனாவால் மீண்டும் சொந்த ஊா் திரும்பிய தொழிலாளா்கள் 36 பேருக்கு தலா ரூ.ஒரு லட்சம் கடனுதவி வழங்கப்பட்டன.
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ச.பாரி தலைமை வகித்தாா்.
ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்டச் செயல் அலுவலா் முத்தமிழ்ச்செல்வன் வரவேற்றாா்.
செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன் தொழிலாளா்களுக்கு கடனுதவிகளை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் அதிமுக நிா்வாகிகள் கே.பாஸ்கா் ரெட்டியாா், எம்.கே.ஏ.லோகேஸ்வரன், எ.விஜய், ஈ.முனுசாமி, பந்தல் சேகா், ஊரக புத்தாக்கத் திட்ட செயல் அலுவலா்கள் தனசேகரன், அரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.