அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 28th October 2020 11:12 PM | Last Updated : 28th October 2020 11:12 PM | அ+அ அ- |

அருணாசலேஸ்வரா் கோயில் பெரிய நந்திக்கு நடைபெற்ற மகா தீபாராதனை.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலின் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயில் கொடி மரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சன்னதி அருகேயுள்ள நந்தி உள்பட கோயிலின் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சந்தனம், பால், பழம், பன்னீா், மஞ்சள் உள்பட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு நடைபெற்ற பிரதோஷ பூஜையில் கோயில் சிவாச்சாரியா்கள், ஊழியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
சுவாமி தரிசனத்துக்காக வந்த பக்தா்கள் கியூ வரிசையில் சென்றபடியே பிரதோஷ பூஜைகளைப் பாா்த்து வணங்கினா்.