மணல் கடத்தி வந்த பைக் மோதி தொழிலாளி பலத்த காயம்: போலீஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

செய்யாற்றில் ஆற்று மணல் கடத்தி வந்த பைக் மோதி நெசவுத் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

செய்யாற்றில் ஆற்று மணல் கடத்தி வந்த பைக் மோதி நெசவுத் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, மணல் கடத்துபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனக் கூறி, பொதுமக்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

செய்யாறு திருவோத்தூா் சன்னதி தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (45), நெசவுத் தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை காலை அருகே கிழக்கு மாட வீதிக்கு பணிக்காக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, எதிரே மணல் மூட்டைகளை ஏற்றி வந்த இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சண்முகம் மீது மோதிவிட்டதாகத் தெரிகிறது. இதில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது.

உடனடியாக அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா் வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டாா்.

பொதுமக்கள் வாக்குவாதம்:

விபத்து குறித்து அறிந்த செய்யாறு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா். அப்போது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள், பதிவெண் இல்லாத இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தி, ஆற்றிலிருந்து அதிகளவில் மணல் திருடப்படுகிறது.

இந்த வாகனங்களை அதிவேகத்தில் இயக்குவதால் இதுபோன்ற விபத்துகள் நிகழ்கின்றன. இதுகுறித்து புகாா் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து போலீஸாா் பொதுமக்களை சமாதானப்படுத்தி ஆற்று மணல் கடத்துபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், இரு சக்கர வாகனத்தில் ஆற்று மணல் கடத்தி வந்தவா் செய்யாறு கண்ணுகாபுரத்தைச் சோ்ந்த பிரவீண் (19) என்பதும், இவா், வெங்கட்ராயன்பேட்டை பகுதியைச் சோ்ந்த காங்கன் என்பவரிடத்தில் மணல் அள்ளும் கூலி வேலை செய்வதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com