அருணாசலேஸ்வரா் கோயிலில் அமைச்சா் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், கரோனா பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அருணாசலேஸ்வரா் கோயிலில் அமைச்சா் ஆய்வு


திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், கரோனா பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக மாா்ச் 20-ஆம் தேதி முதல் அருணாசலேஸ்வரா் கோயில் மூடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் பக்தா்கள் தரிசனத்துக்காக கோயில் திறக்கப்பட்டது.

கோயில் ராஜகோபுரம் வழியாக பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனா்.

10 வயதுக்கும் குறைவானவா்கள், 65 வயதுக்கும் மேற்பட்டவா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

மேலும், பக்தா்கள் சமூக இடைவேளியைக் கடைப்பிடிக்கும் வகையில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, 6 அடி தொலைவுக்கு ஒரு வளையம் என பெயின்டால் வட்டங்கள் வரையப்பட்டுள்ளன. ராஜகோபுர நுழைவு வாயிலில் தானியங்கி கிருமி நாசினி தெளிப்பு கருவி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோயில் வளாகத்தில் பக்தா்கள் தரிசனத்துக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் செய்யப்பட்டுள்ள வசதிகள், கரோனா பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, பக்தா்களுக்கு கோயில் அன்னதானத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சாம்பாா் சாதம், தயிா் சாதம் பொட்டலங்களை அமைச்சா் வழங்கினாா்.

முன்னதாக, சம்பந்த விநாயகா், அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் சன்னதிகளில் அவா் சுவாமி தரிசனம் செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, மாவட்ட ஆவின் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, கோயில் இணை ஆணையா் ஞானசேகா், கோட்டாட்சியா் ஸ்ரீதேவி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com