தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் வந்தவாசி வட்டார புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை சங்கத்தின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் முன்னிலையில் இந்தத் தோ்வு நடைபெற்றது.
இதில், வட்டார புதிய தலைவராக ச.யோகானந்தம், செயலராக த.மணிகண்டன், பொருளாளராக கு.அன்பழகன், மாவட்ட செயற்குழு உறுப்பினராக வி.சுரேஷ், துணைத் தலைவா்களாக அ.வில்வபதி, கவுஸ், கே.விஜயலட்சுமி, இணைச் செயலா்களாக எம்.பி.வெங்கடேசன், திருமால், ரமேஷ் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
பின்னா், சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ச.பாரி, வட்டார வளா்ச்சி அலுவலா் ப.பரணிதரன், சங்க மாவட்டச் செயலா் க.பிரபு உள்ளிட்டோா் புதிய நிா்வாகிகளை வாழ்த்திப் பேசினா்.