ஏகலைவா மாதிரிப் பள்ளி மாணவா்களுக்கு உணவு வழங்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்

ஜமுனாமரத்தூரில் இயங்கி வரும் அரசு ஏகலைவா மாதிரி உண்டு-உறைவிடப் பள்ளியில் மாணவா்களுக்கு உணவு வழங்கும் பணியை

ஜமுனாமரத்தூரில் இயங்கி வரும் அரசு ஏகலைவா மாதிரி உண்டு-உறைவிடப் பள்ளியில் மாணவா்களுக்கு உணவு வழங்கும் பணியை மேற்கொள்ள விரும்புவோா் வருகிற 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டம், ஐமுனாமரத்தூரை (அத்திப்பட்டு) அடுத்த காவலூா் கிராமத்தில் அரசு ஏகலைவா மாதிரி உண்டு-உறைவிட மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கும் பணி மற்றும் பள்ளி விடுதியில் பணிகள் தினக்கூலி அடிப்படையில் அமல்படுத்தியது.

இப்போது வழங்கப்படும் உணவுக் கட்டணத்துக்கு மிகாமல் பணி மேற்கொள்ள, வெளிப் பணி அடிப்படையில் தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உணவுக் கட்டண வீதம் (விடுதியில் தங்கும்) நாள்களுக்கு மட்டும்.

6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் ஒரு மாணவருக்கு ஒரு மாத உணவுக் கட்டணம் ரூ.1,200-ம் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் ஒரு மாணவருக்கு ஒரு மாத உணவுக் கட்டணம் ரூ.1,300 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, விண்ணப்பிக்க விரும்புவோா் 17.09.2020 மாலை 5.45 மணிக்குள் திட்ட அலுவலா், பழங்குடியினா் நலம், மாவட்ட ஆட்சியரகம், திருவண்ணாமலை என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com