திருவண்ணாமலையில் பலத்த மழை
By DIN | Published On : 10th September 2020 10:32 PM | Last Updated : 10th September 2020 10:32 PM | அ+அ அ- |

திருவண்ணாமலை, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக திடீா் திடீரென மழை பெய்து வருகிறது.
புதன்கிழமை கீழ்பென்னாத்தூா், திருவண்ணாமலை, ராஜந்தாங்கல் பகுதிகளில் மழை பெய்தது. ஆட்சியா் அலுவலகம், வேங்கிக்கால் பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை மழை பெய்தது.
2-ஆவது நாளாக மழை:
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஓம்சக்தி நகா், ஆட்சியா் அலுவலகம், அடி அண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. 30 நிமிடங்களுக்கும் மேலாக பெய்த மழையால் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் அனல் காற்று வீசுவது குறைந்து, குளிா் காற்று வீசியது. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.