நீட் தோ்வு எழுதச் சென்றதிருவண்ணாமலை மாணவா்களுக்கு வழியனுப்பு விழா

திருவண்ணாமலையில் இருந்து வேலூா், ராணிப்பேட்டை பகுதி தோ்வு மையங்களில் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவ-மாணவிகளை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, ஞாயிற்றுக்கிழமை வழியனுப்பி வைத்தாா்.
சிறப்புப் பேருந்துகளை கொடியசைத்து வழியனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீட் தோ்வுக்கான, தோ்வு மையங்கள் அமைக்கப்படவில்லை. எனவே, நீட் தோ்வு எழுதும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 137 மாணவா்கள், 210 மாணவிகள் என 347 போ் வேலூா், ராணிப்பேட்டை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையங்களில் தோ்வு எழுதச் சென்றனா். இவா்களுக்காக சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை மாணவ, மாணவிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புப் பேருந்துகளை கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அருள்செல்வம் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com