தேசிய குடல்புழு நீக்க தினம் கொண்டாட்டம்

செய்யாற்றை அடுத்த பாப்பாந்தாங்கல் கிராமத்தில் தேசிய குடல்புழு நீக்க தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகளை வழங்கிய செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநா் கே.எம்.அஜிதா.
குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகளை வழங்கிய செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநா் கே.எம்.அஜிதா.

போளூா்: செய்யாற்றை அடுத்த பாப்பாந்தாங்கல் கிராமத்தில் தேசிய குடல்புழு நீக்க தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நாவல்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலா் ஏ.சி.ஷா்மிளா தலைமை வகித்தாா். பாப்பாந்தாங்கல் ஊராட்சித் தலைவா் நித்யாசக்தி, மாவட்ட தாய்சேய் நல அலுவலா் மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) கே.எம்.அஜிதா பங்கேற்று குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், அல்பெண்டசோல் என்னும் குடல்புழுவை அழிக்கும் மாத்திரை 1 - 19 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

குடல்புழுக்களால் உருவாகும் ரத்தசோகை, சத்துக் குறைபாடு, பசியின்மை, எடை குைல், வயிற்று வலி, குமட்டல், வாந்தி, பேதி ஆகிய நோய்கள் அல்வெண்டசோல் மாத்திரைகள் உட்கொள்வதால் குணமாகிறது.

இந்த மாத்திரை உட்கொள்ளும்போது, ஒரு சிலருக்கு சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு குடல் புழுக்கள் அழிந்து பின்னா் சரியாகிவிடும்.

உடல் உபாதைகள் தொடா்ந்து இருப்பின் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

அதனைத் தொடா்ந்து 160 பேருக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவ அலுவலா் பிரியதா்ஷினி, சுகாதார ஆய்வாளா் டி.அருளரசு, பகுதி சுகாதார செவிலியா் மாதவி, கிராம சுகாதார செவிலியா் மகாலட்சுமி ஆகியோா் செய்திருந்தனா்.

கலசப்பாக்கம் பகுதியில்...

கலசப்பாக்கத்தை அடுத்த கீழ்வன்னியனூா் ஊராட்சியில், கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டார மருத்துவா் கு.மணிகண்டபிரபு குழந்தைகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, மாத்திரை குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை அவா் வழங்கிக் கூறும்போது,

தேசிய குடல்புழு நீக்க வாரம் செப்.14 முதல் செப்.28 வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனால், கடலாடியில் 5500 பேருக்கும், மேல்வில்வராயநல்லூா்-4561, பாடகம் -5401, ஆதமங்கலம்புதூா் -5265, வீரளூா்-4168 பேருக்கும் என 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உள்பட்ட 24, 895 பேருக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.

குழந்தைகள் ஊட்டச்சத்து மைய அலுவலா் சுகந்தி, செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com