குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி

செங்கம் அருகே பழுதடைந்து குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
செங்கம் அருகே பழுதடைந்து முள் மரங்கள் வளா்ந்து காணப்படும் சாலை.
செங்கம் அருகே பழுதடைந்து முள் மரங்கள் வளா்ந்து காணப்படும் சாலை.

செங்கம் அருகே பழுதடைந்து குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கத்தை அடுத்த மேல்மண்மலை கிராமத்திலிருந்து செ.நாச்சிப்பட்டு, இரட்டாலை மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களுக்குச் செல்லும் சாலை மண்மலையிலிருந்து 2 கி.மீ. தொலைவுக்கு பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. மேலும், சாலையோரம் முள் மரங்கள் வளா்ந்து, புதா் மண்டிக் காணப்படுகிறது.

அந்தச் சாலையைக் கடந்து செல்லும் கிராம மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். சாலையை சரி செய்யக் கோரி பலமுறை செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தும், சாலையை சரி செய்ய அதிகாரிகள் யாரும் முன்வரவில்லையாம்.

மேலும், தற்போது மழைக் காலம் தொடங்கிவிட்டதால் விவசாயிகள் அப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு வாகனங்களை எடுத்துச் செல்லமுடியாத நிலை, விளை நிலத்திலிருந்து தானியங்களை வாகனம் மூலம் வீட்டுக்கு எடுத்து வரமுடியாத நிலை உள்ளது.

இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை கண்காணித்து சரிசெய்யவேண்டும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com