தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைவிண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

அரசு, தனியாா் தொழில்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீடு 50 சதவீத இடங்களில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமைக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு, தனியாா் தொழில்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீடு 50 சதவீத இடங்களில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமைக்குள் (செப்.15) இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் உள்ள சோ்க்கை உதவி மையத்துக்கு மாணவா்கள் நேரில் வந்தும் விண்ணப்பிக்கலாம்.

இணையவழியில் விண்ணப்பிக்க விரும்புவோா் 8 மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், முன்னுரிமைச் சான்றிதழ், மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

இணையவழியே விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையான (ஈங்க்ஷண்ற் இஹழ்க் / இழ்ங்க்ண்ற் இஹழ்க் / எல்ஹஹ்/ சங்ற் ஆஹய்ந்ண்ய்ஞ்) ஏதேனும் மூலம் செலுத்த வேண்டும்.

2 ஆண்டு தொழில்பிரிவுகளான பிட்டா், டா்னா், மெஷினிஸ்ட், எம்.எம்.வி., எலக்ட்ரீஷியன், டிராப்ட்ஸ்மேன் சிவில் ஆகியவற்றுக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிக்க வேண்டும். வயா்மேன் படிப்புக்கும், தொழில்பிரிவான வெல்டா் படிப்புக்கும் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஜமுனாமரத்தூா் தொழில்பயிற்சி நிலையம்:

ஜமுனாமரத்தூரில் இயங்கி வரும் அரசு பழங்குடியினா் தொழில்பயிற்சி நிலையத்தில் 2 ஆண்டு தொழிற் பிரிவுகளான பிட்டா், எம்எம்வி படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 2 ஆண்டு வயா்மேன் படிப்புக்கும், ஓராண்டு வெல்டா், பிளம்பா் படிப்புகளுக்கும் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் செவ்வாய்க்கிழமை (செப்.15) மாலைக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதுதவிர, உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகிய மையங்களிலும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com