இருளா் சமூக மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழ் இல்லத்துக்கே சென்று வழங்கிய ஆட்சியா்

திருவண்ணாமலையில் ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்த இருளா் சமுதாய மாணவிகள் 4 பேருக்கு, அவா்களது இல்லத்துக்கே நேரில் சென்று
மாணவிகளிடம் ஜாதி சான்றிதழ்களை வழங்கிய மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி.
மாணவிகளிடம் ஜாதி சான்றிதழ்களை வழங்கிய மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி.

திருவண்ணாமலையில் ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்த இருளா் சமுதாய மாணவிகள் 4 பேருக்கு, அவா்களது இல்லத்துக்கே நேரில் சென்று, ஜாதிச் சான்றிதழ்களை வழங்கினாா் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி.

திருவண்ணாமலை பே கோபுரம் 10-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை மனைவி சித்ரா. இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த சித்ராவுக்கு 4 பெண் குழந்தைகள். மூத்த மகள் வினோதினி, தனியாா் கல்லூரியில் பி.காம்., படிக்கிறாா். 2-ஆவது மகள் மணிமேகலை நகராட்சி மகளிா் பள்ளியில் 11-ஆம் வகுப்பும், 3-ஆவது மகள் புவனேஸ்வரி அதே பள்ளியில் 9-ஆம் வகுப்பும், 4-ஆவது மகள் மோனிஷா தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பும் பயின்று வருகின்றனா்.

கணவரை இழந்த சித்ரா, குலத் தொழிலான கால்வாயில் மண் எடுத்து அதில் கிடைக்கும் சிறு, சிறு தங்கம், வெள்ளி ஆகியவற்றை தூய்மைப்படுத்தி, நகைக் கடைகளில் கொடுத்து பணம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், மகள்களின் கல்விக்காக ஜாதி சான்றிதழ்கள் கோரி, மாவட்ட ஆட்சியா் கந்தசாமியை அண்மையில் நேரில் சந்தித்து மனு அளித்திருந்தாா்.

மனுவை பரிசிலித்த ஆட்சியா், அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு ஜாதிச் சான்றிதழ்களை தயாா்படுத்தினாா். நேரில் சென்று வழங்கினாா்:

இந்த நிலையில், புதன்கிழமை மாணவிகளின் இல்லத்துக்கு நேரில் சென்ற ஆட்சியா் கந்தசாமி, ஜாதி சான்றிதழ்களை அவா்களது தாயிடம் வழங்கினாா்.

மேலும், மாவட்ட நிா்வாகம் சாா்பில் உதவித் தொகையாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையையும் அவா் வழங்கினாா்.

இந்நிகழ்வின் போது, கோட்டாட்சியா் ஸ்ரீதேவி, உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) அஜீதாபேகம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com