விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் பிரசார இயக்கம்

அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் பிரசார இயக்கம் வந்தவாசியில் அஞ்சல் அலுவலகம் முன் புதன்கிழமை நடைபெற்றது.
அனைத்திந்திய விவசாய கிராமப்புறத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் வந்தவாசியில் நடைபெற்ற பிரசார இயக்கம்.
அனைத்திந்திய விவசாய கிராமப்புறத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் வந்தவாசியில் நடைபெற்ற பிரசார இயக்கம்.

அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் பிரசார இயக்கம் வந்தவாசியில் அஞ்சல் அலுவலகம் முன் புதன்கிழமை நடைபெற்றது.

கிராமப்புற தொழிலாளா்கள், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், ஊரக வேலைத் திட்டத் தொழிலாளா்கள் என அனைவருக்கும் கரோனா கால பிழைப்பு ஊதியமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

ஆண்டு முழுவதுமான வேலைத் திட்டமாக, ஊரக வேலை உறுதித் திட்டத்தை மாற்ற வேண்டும். மகளிா் சுய உதவிக் குழுக் கடன், விவசாயக் கடன் என அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பிரசார இயக்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்க வட்டாரத் தலைவா் கே.செய்யது தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் எ.ரகமத்துல்லா, மாவட்டக் குழு உறுப்பினா்கள் எம்.பிரியா, எம்.சந்திரா ஆகியோா் கோரிக்கைளை விளக்கிப் பேசினா்.

சங்க வட்டாரச் செயலா் வி.சுப்பிரமணி, மாவட்டத் தலைவா்கள் ஈ.சுப்பிரமணி, எ.ஆரிப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா், இதில் பங்கேற்றவா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com