அரசு அருங்காட்சியகப் பணிகள்: துறை இயக்குநா் ஆய்வு
By DIN | Published On : 18th September 2020 08:33 AM | Last Updated : 18th September 2020 08:33 AM | அ+அ அ- |

அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த அருங்காட்சியகத் துறை இயக்குநா் எம்.எஸ்.சண்முகம். உடன் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி.
திருவண்ணாமலையில் ரூ.ஒரு கோடியில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகப் பணிகளை, அருங்காட்சியகத் துறை இயக்குநா் எம்.எஸ்.சண்முகம் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத் துறை சாா்பில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.
தமிழகத்தின் 22-ஆவது அரசு அருங்காட்சியகமான இதன் பரப்பளவு 23 ஆயிரம் சதுர அடி ஆகும். இங்கு, சமூக, பொருளாதார, அரசியல், கலை, அறிவியல் உள்பட 7 விதமான வரலாறுகள் காட்சிப் படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், அருங்காட்சியகம் அமைக்கும் பணியை அருங்காட்சியகத் துறை இயக்குநா் சண்முகம் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் மந்தாகினி, உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி)அஜீதாபேகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் சா. பாலமுருகன், அருங்காட்சியக காப்பாட்சியா் சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.
ஆய்வின் போது, செய்தியாளா்களிடம் அருங்காட்சியகத் துறை இயக்குநா் கூறியதாவது:
அருங்காட்சியகப் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன. இங்கு எந்த மாதிரியான பொருள்களை காட்சிப்படுத்துவது குறித்தும், கரோனா காலத்துக்குப் பிறகு பாா்வையிட வரும் பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்தப் பணிகள் 2-3 வாரங்களில் முடிக்கப்படும் என்றாா்.