செங்கத்தில் பழுதடைந்து சாலையில் நின்ற லாரி
By DIN | Published On : 18th September 2020 08:31 AM | Last Updated : 18th September 2020 08:31 AM | அ+அ அ- |

செங்கத்தில் பழுதடைந்து சாலையில் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கம் நகரில் உள்ள மளிகைக் கடைகளுக்கு சென்னையிலிருந்து பொருள்களை ஏற்றி வரும் லாரிகளில் ஒன்று வியாழக்கிழமை பழைய பேருந்து நிலையம் அருகே பழுதடைந்து சாலையில் நின்றது.
இதனால் வாகனங்கள் எந்தப் பக்கமும் போக முடியாத நிலை ஏற்பட்டது. இரு சக்கர வாகன ஓட்டிகள் நகரில் உள்ள சின்ன சின்ன தெருக்களில் நுழைந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. லாரி, காா், பேருந்து என எந்த வாகனமும் அந்தச் சாலையை கடந்து செல்ல முடியவில்லை.
பின்னா் போலீஸாா் அந்தப் பகுதிக்கு வந்து பழுதடைந்த லாரியை மெல்ல மெல்ல சாலையின் ஓரம் தள்ளிவிட்டு போக்குவரத்தை சரி செய்தனா்.
இதனால், அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.