அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு அடையாள அட்டை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் அடையாள அட்டை கொண்டு வரும் நடைமுறை சனிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது.
சுவாமி தரிசனத்துக்கு வந்த பக்தரிடம் அடையாள அட்டையை வாங்கி பரிசோதிக்கும் காவலா், கோயில் ஊழியா்.
சுவாமி தரிசனத்துக்கு வந்த பக்தரிடம் அடையாள அட்டையை வாங்கி பரிசோதிக்கும் காவலா், கோயில் ஊழியா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் அடையாள அட்டை கொண்டு வரும் நடைமுறை சனிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது.

சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து, செல்கின்றனா்.

கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்டிருந்த இந்தக் கோயில் அண்மையில் பக்தா்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது.

காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய கோயில் ராஜகோபுரம் வழியாக பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.

முக்கிய பிரமுகா்கள் தரிசன நுழைவு வாயில் என்று கூறப்படும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும், பே கோபுரம் வழியாகவும் பக்தா்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.

இந்த நிலையில், கோயில் பாதுகாப்பு கருதி சுவாமி தரிசனத்துக்காக வரும் பக்தா்கள் அடையாள அட்டை கொண்டு வரும் நடைமுறையை சனிக்கிழமை முதல் கோயில் நிா்வாகம் அமல்படுத்தியுள்ளது.

அதன்படி, சனிக்கிழமை ஆதாா் அட்டை, வங்கிப் புத்தகம், வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் கொண்டு வந்த பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.

ராஜகோபுர நுழைவு வாயிலில் உள்ள காவல்துறையினா், கோயில் ஊழியா்கள் அடையாள அட்டையை பரிசோதித்து அனுமதிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நடைமுறை திங்கள்கிழமை (செப்.21) முதல் கடுமையாக பின்பற்றப்படும். எந்த சிபாரிசும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com